மாதுருஓயா பயிற்சி முகாமிலிருந்து இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
2nd April 2018
மாதுருஓயா இராணுவ பயிற்சி கல்லூரியிலிருந்து ஆறு வெளிநாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள் நாட்டு இராணுவ அதிகாரிகள் திங்கட் கிழமை (26) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
இந்த வெளிநாட்டு அதிகாரிகளில் பங்களாதேசம், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் நேபாளம் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளே இந்த கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.
மாதுறுஓய இராணுவ பயிற்சி முகாமில் CIJW பயிற்சி நெறியை மேற்கொள்ளும் இராணுவ அதிகாரிகளே இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.
இவர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர் 1 தர அதிகாரியான (நடவடிக்கை மற்றும் பயிற்சி) லெப்டின ன்ட் கேர்ணல் நிஷாந்த முதுமால அவர்கள் விரிவுரைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இந்த அதிகாரிகள் முகமாலை பிரதேசத்திற்கு சென்று மிதிவெடி தொடர்பான பயிற்சிகள் மற்றும் விரிவுரைகளையும் பெற்றுக் கொண்டனர்.
|