இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு
29th March 2018
இலேசாயுத காலாட் படையணியின் 9 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் (22) ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
புதிதாக பதவியேற்பிற்கு வருகை தந்த படைத் தளபதியை 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா மற்றும் இலேசாயுத காலாட் படையணியின் பிரதி கட்டளை அதிகாரி கேர்ணல் அநுர திசாநாயக அவர்கள் வரவேற்று இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை இப் படையணியினால் வழங்கப்பட்டன.
பின்னர், 'கந்துல' முன்னிலையில் படைத் தளபதி கௌரவித்தார். அச் சமயத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிகளுக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
பின்பு படைத் தளபதி தனது பணிமனைக்கு வருகை தந்து உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றார். பின்பு படைத் தளபதி இராணுவத்தினர் மத்தியில் உரையை நிகழ்த்தி படைத் தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டார்.
இறுதியில் படைத் தளபதி படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுடன் குழுப் புகைப்படத்தில் இணைந்திருந்தனர்.
|