இராணுவத்தினரால் கிளிநொச்சியில் 150.15 ஏக்கர் நிலப்பரப்புக்கள் விடுவிப்பு
18th October 2019
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இன்று காலை (18) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 150.15 ஏக்கர் காணிகள் விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு காணிப்பத்திரங்களை அரச உயரதிகாரிகளுக்கு வழங்கி வைத்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியாருக்கு சொந்தமான காணிகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் படையினரிடமிருந்த காணிகள் தற்போது நிலவும் சமாதானம் நிமித்தம் ஜனாதிபதி செயலகத்தின் கருத்திட்டத்தின் கீழ் இந்த காணி விடுவிப்புகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 139.56 ஏக்கர் அரச நிலங்களும், தனியாருக்கு சொந்தமான 10.59 நிலங்களில் 57 ஆவது படைப் பிரிவு மற்றும் 3 ஆவது கஜபா படையணியினர் நிலை கொண்டிருந்த கிளிநகர், கரச்சி , அம்பகாமம் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கிராம சேவக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களினுள்ள காணிகள் இராணுவ தளபதி அவர்களினால் கிளிநொச்சி மாவட்ட செயலாளரான திரு எஸ் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ஆர் கேதிஸ்வரன் அம்மையார் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
"மக்களையும் நாட்டையும் பெருமளவில் பாதுகாக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம், நல்லிணக்கத்தின் வேகமாக வளர்ந்து வரும் நகர்வுகளையும், ஒரு தேசமாக நல்லெண்ணம் மற்றும் நட்பின் பிணைப்புகளையும் நாசப்படுத்த விரும்பவில்லை. துருப்புக்கள் எப்போதுமே சமூகங்களுக்கு உதவி வழங்கத் தயாராக இருக்கிறார்கள், குறிப்பாக அவர்கள் சிக்கலில் இருக்கும்போது முன்வருவார்கள். நீங்கள் அனைவரும் இப்போது அறிந்திருப்பதால், பல்நோக்கு இயல்புடைய சமூகம் சார்ந்த பாரிய திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம், ”என்று இராணுவ தளபதி அவர்கள் இந்த நிகழ்வில் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். |