பொறிமுறை காலாட் படையணியின் புதிய படைத் தளபதி நியமிப்பு
28th March 2018
பொறிமுறை காலாட் படையணியின் 8 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் (27) ஆம் திகதி தம்புள்ளையில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதியாக தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இராணுவ சம்பிரதாய முறைப்படி படைத் தளபதியை இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பொறிமுறை காலாட் படையணி இராணுவ வீரர்கள் வரவேற்றனர். பின்பு தனது பணிமனைக்கு படைத் தளபதி வருகை தந்து உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவிகளை பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து மங்கள விளக்குகளையும் எற்றி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினருடன் உறையாடலையும் மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து, 532 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசுந்தர, பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி கேர்ணல் எச்.எம்.யூ ஹேரத் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
|