23 ஆவது சிங்கப் படையணியினால் 'எதிர்ப்பு வன்முறை தீவிரம்' தொடர்பான விழிப்புணர்வு

28th March 2018

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரையின் கீழ் நாடு முழுவதும் சேவையில் உள்ள இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் திறமையை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 24 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 23 ஆவது சிங்கப் படையணியின் அதிகாரிகளினால் 24 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் சேவை புரியும் இராணுவத்தினருக்கு ('எதிர்ப்பு வன்முறை தீவிரவாதத்தில் ஆயுதப்படைகளின் பங்கு') எனும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றன.

23 ஆவது சிங்கப் படையணி தலைமையகத்தில் 40 இராணுவ அதிகாரிகளது பங்களிப்புடன் இந்த விழிப்புணர்வு இடம்பெற்றன. இந் நிகழ்விற்கு 24 ஆவது படைப் பிரிவை பிரதிநிதித்துவ படுத்தி 241 ஆவது படைப் பிரிவின் படைத்தளபதி, கேணல் டபிள்யூ. சந்திரசிறி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த விரிவுரையின் முடிவில் பங்கேற்பாளர்கள் விரிவுரை கருத்தரங்குகள் மற்றும் பதில் அட்டவணையின் மூலம் சம்பந்தப்பட்ட விடயத்தில் அறிவை வளர்த்துக் கொள்ள முடிந்த விழிப்புணர்வாக அமைந்தது.

|