படகோட்ட போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியினர் வெற்றி

26th March 2018

இலங்கை இராணுவ படகோட்ட கழகத்தினரின் ஒழுங்கமைப்பின் 2018க்கான பாதுகாப்பு சேவை படகோட்ட போட்டியில் முப்படை வீரர வீராங்கனைகள் போட்டியிட்டனர் இப் போட்டியானது மார்ச் 21ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை தியவன்னா ஓயாவில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இராணுவ மகளிர்; படையணியினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

இப் போட்டியில் இராணுவ ஆண்கள் மற்றும் மகளிர் குழுவினர் தனது திறமைகளை வெளிக்காட்டி 03 தங்கப் பதக்கம் 03 வெள்ளிப் பதக்கம் இராணுவ மகளிர் குழுவினர் பெற்றுக் கொண்டதோடு இராணுவ ஆண்கள் குழுவினர் 01 தங்கபதக்கம் மற்றும் 01 வென்கலப் பதக்கங்களை பெற்று வெற்றிப் பெற்றனர்.

இந்த; போட்டி நிகழ்விற்கு படகோட்ட குழுவின் அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களின் அழைப்பை ஏற்று பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராணுவ படைத் தலைமையகத்தின் பிரதான பதவி நிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணாந்து அவர்களால் வெற்றி பெற்ற வீர வீராங்கனைக்கு சான்றிதல்கள் மற்றும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது.

|