கடவத்தமடுவ அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் சீருடைகள்

25th March 2018

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23அவது படைப்பிரிவின் கட்டளை தளபதியவர்களின் ஆசிர்வாதத்துடன் சமூக சார்ந்த திட்டத்தினரின் ஏற்பாட்டில் வெலிக்கந்த கடவத்தமடுவில் உள்ள ஸ்ரீ போதிராஜராம விகாரையின் அறநெறி பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை சீருடை மற்றும் உபகரணங்களும் (16)அம் திகதி வெள்ளிக் கிழமை படையினரால் வழங்கப்பட்னர்.

இந்த திட்டத்தின் மூலம் 114 க்கும் மேற்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் பயனடைந்தனர். மேலும் திருமதி ஹினாயா குணதிலக்க மற்றும் ஹரேன் குணதிலக ஆகியோரால் சில உதவிகள் நன்கொடைகளும் வழங்கப்பட்டனர்.

இந்த நிகழ்வானது 23ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுலா அபோணாயக ,அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதகுருமார்கள், ஆசிரியர்கள் மற்றும் பல இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|