21 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட நீச்சல் போட்டிகள்

22nd March 2018

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான நீச்சல் போட்டிகள் (17) ஆம் திகதி சனிக் கிழமை 21 ஆவது படைப் பிரிவு தலைமையக நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றன.

21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது கண்காணிப்பின் கீழ் சர்வதேச ரீதியான போட்டிகளில் படையினரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த போட்டிகள் இரண்டு நாட்கள் இடம்பெற்றன.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களினால் வெற்றியீட்டிய படை வீர ர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16, 17 ஆம் திகதிகளில் 21, 54 , 56, 61 மற்றும் 62 ஆவது படைப் பிரிவு 2, 4 ஆவது தொண்டர் இலங்கை இராணுவ மகளீர் படையினரும் இந்த நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

2018 ஆம் ஆம் ஆண்டு பாடசாலைகளுக்காகன நீச்சல் போட்டிகள் அநுராதபுர கல்வி வலயத்தின் கீழ் பிரதான 08 பாடசாலைகள் கலந்துகொண்டு போட்டியிட்டன. இப் போட்டியில் அநுராதபுர வலிசிங்க ஹரிச்சந்திர வித்தியாலயத்தின் ஆண்கள் அணியினர் மற்றும் அநுராதபுர ஸ்வரணபாலி பாலிகா வித்தியாலயத்தின் மகளிர் அணியினர் வெற்றிப்பெற்றனர்.

இந்த நீச்சல் போட்டிகளில் இராணுவ விளையாட்டு வீர விராங்கனைகள் மற்றும் பாடசாலை பிரிவினர் சிறந்த மட்டங்களில் பங்கு பற்றும் நோக்குடன் 21ஆவது படைப்பிரிவினால் இந்த நீச்சல் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

வட மத்திய பாதுகாப்பு முன்னரங்க தலைமையகத்தை பிரதிநிதித்துவ படுத்தி லான்ஸ் கோப்ரல் யூ.கே சதுரங்க மற்றும் 21 ஆவது படைத் தலைமையகத்தை பிரதிநிதித்துவம் படுத்தி குதிரை படை வீரர் ஆர்.எம் ஜயசிங்கவும் 2018 ஆம் ஆண்டு படைப் பிரிவு நீச்சல் போட்டியில் திறமையான நீச்சல் வீராங்கனையாக மகளீர் படை வீராங்கனையாக எஸ். எம் குணதிலக தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிகழ்வில் 21, 54 மற்றும் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள், படையணியின் கட்டளை அதிகாரிகள் , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் ,ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

|