பொறிமுறை காலாட் படையின் படைத் தளபதி பதவி மாற்றம்
22nd March 2018
பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் விடைபெற்றுச் செல்லும் நிகழ்வு (17) ஆம் திகதி சனிக் கிழமை தம்புள்ளையில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.
பொறிமுறை காலாட் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி இப் படையணியின் பிரதி கட்டளை அதிகாரி கேர்ணல் எச்.எம்.யூ. ஹேரத் மற்றும் கேர்ணல் எல். எஸ் பாலசந்திர அவர்கள் வரவேற்று இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டன.
அத்துடன் பொறிமுறை காலாட் படையணிக்கு உரிய கவச வாகனங்களில் ஏற்றி அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டன. பின்பு படைத் தளபதியினால் படைத் தலைமையக வளாகத்தினுள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட காவல் அறை திறந்து வைக்கப்பட்டன.
பொறிமுறை காலாட் படையணியின் அதிகாரிகளினால் படைத் தளபதிக்கு இரவு விருந்தோம்பல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
மேலும் இப்படைத் தலைமையகத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி துஷாரி குலதுங்க அவர்களும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். விடைபெற்றுச் செல்லும் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
|