காலஞ் சென்ற நாக விகாராதிபதியின் தான நிகழ்வு

21st March 2018

வடக்கு மாகாண மற்றும் நாக விகாரையின் பௌத்த விகாராதிபதியான பூஜிய மீக்கஜதுரே ஞானரத்ன சுவாமி வஹன்ஷ அவர்களது தான நிகழ்வு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் (19) ஆம் திகதி திங்கட் கிழமை யாழ்ப்பாண நாகவிகாரை வளாகத்தினுள் இடம்பெற்றன.

இந்த தான நிகழ்விற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காலஞ் சென்ற விகாராதிபதி 1991 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ் நாக விகாரையில் வசித்து வந்தார். பொதுமக்களுக்கு இடையில் சமாதான நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிகழ்விற்கு பௌத்த தேரர்கள், கொழும்பு மாவட்ட ஆயர் மெல்கம் காதினல் ரஞ்சித் , இந்து பூசகர்கள், முஸ்லீம் மௌவிமார்கள் வருகை தந்தனர்.

|