தெபரவெவ பாடசாலை மாணவ மாணவிகளுக்கு ‘ தலைமைத்துவம்’ தொடர்பான விளக்கமளிப்பு

20th March 2018

தெபரவெவ வித்தியாலயத்தின் அதிபரினால் இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் ‘ தலைமைத்துவம் பயிற்சி விழிப்புணர்வு’ நிகழ்ச்சி திட்டம் 84 பேரது பங்களிப்புடன் (19) அம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.

படைப் பிரிவின் பதவி நிலை உத்தியோகத்தர் 11 மேஜர் எம். பீ சிங்கரா அவர்களினால் இந்த விரிவுரைகள் மற்றும் உடற் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த விழிப்புணர்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் 84 பேர் கலந்து கொண்டனர்.

|