இராணுவ செயற்பாட்டு திட்டமிடல் கல்லுாரி இராணுவத்தினரின் பங்களிப்புடன் மர நடுகை நிகழ்வு
20th March 2018
திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவ செயற்பாட்டு திட்டமிடல் கல்லுாரியில் உள்ள இராணுவத்தினரின் பங்களிப்புடன் கடந்த (15)ஆம் திகதி வியாழக் கிழமையன்று மா, எழுமிச்சை, விளா , மாதுளை போன்ற 1000 மரக் கன்றுகள் நடும் நிகழ்வு ‘அபி வவமு-ரட நகமு’ எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய உணவு திட்டத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இந்த நிகழ்விற்கு இராணுவ செயற்பாட்டு திட்டமிடல் கல்லுாரியில் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் தீபல் வன்னியாராச்சி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி திட்டத்திட்கு பழ ஆராய்ச்சியாளர் மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தினரின் ஒத்துழைப்புடன் இக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
|