முல்லைத்தீவு படையினரால் கடலோர பகுதிகளில் சுத்திகரிப்பு பணிகள்

20th March 2018

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 593 ஆவது படைப்பிரிவின் 19ஆவது கெமுனு ஹேவா படையினரால் நாயாறு தொடக்கம் செம்மலை வரையிலான 8 கிலோ மீட்டர் துாரம் கடற்கரை பகுதிகளில் கடந்த (17) ஆம் திகதி சனிக் கிழமை சுத்திகரிப்பு பணிகளை மேற் கொண்டன.

இந் செயல் திட்டமானது 591ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதி கேர்ணல் லங்கா அமரபால அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்டது.

அதன் படி இந்த சுத்திகரிப்பு பணிகளில் 19ஆவது கெமுனு ஹேவா படையினர் மற்றும் 591ஆவது படைப்பிரிவின் படையினருடன் சிவில் மக்களும் கலந்து கொண்டன.

|