திருகோணமலை பாடசாலைகளுக்கு இடையிலான பேண்ட் வாத்திய போட்டிகள்
14th March 2018
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரவின் தலைமையகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பேண்ட் வாத்திய போட்டிகள் திருக்கோணமலை புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் (10) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.
மேற்கத்திய இசைத் துறையில் பாடசாலை மாணவர்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்காக இந்த போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக வருகை தந்த வணக்கத்திற்குரிய ஆயர் டொக்டர் நோயல் இமானுவேல் மற்றும் 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களை புனித ஜோசப் கல்லூரியின் அதிபர் வரவேற்று கௌரவித்தார்.
இந்த போட்டியில் கண்களை கவரும் விதத்தில் 500 மாணவர்களது பங்களிப்புடன் மிக சிறப்பாக மெல்லிசை காற்றுடன், அவர்களோடு, தாளம் மற்றும் இனிமையான மெலடிகள் இசைக்குழுவினரின் திறமை உரத்த சத்தத்துடன் பேன்ட் வாத்திய திறமைகளை வெளிக்காட்டிருந்தன.
நிகழ்ச்சிகளின் நிறைவில் சிறந்த பேண்ட் வாத்திய குழுக்களுக்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது, புனித ஜோசப் கல்லூரி முதலிடத்தைப் பெற்றது, 2 வது மற்றும் 3 வது இடங்களில் இந்து கல்லூரி மற்றும் புனித மேரி கல்லூரிகள் பெற்றன.
சான்றிதழ்கள் வழங்கியபின் நிகழ்வில் பிரதான விருந்தினர் அவர்களினால் பாடசாலையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பேண்ட் வாத்திய குழுவினர்களின் திறமையை பாராட்டி உறையாற்றப்பட்டது.
கஜபா படையணி பேண்ட் குழுவினர் மற்றும் கொமாண்டோ படையணி பேண்ட் குழுவினர் K - A குழுவினர் விழாவில் கலந்து கொண்டதுடன், பேண்ட் காட்சிகள் மற்றும் நாய்களின் சகாச நிகழ்ச்சிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் அழைப்பை ஏற்று 222ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே. பி. எஸ். பிரேமலால், வலய கல்வி பணிப்பாளர் திரு.விஜேந்திரன், பொது முகாமையாளர் திரு.ஈ.குகபிரியா மற்றும் டோக்கியோ சிமெண்ட் பிரிவின் பொது முகாமையாளர் திரு .ஆர்.ரவிகவன், திருகோணமலை மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு. ரங்கநாதன் மற்றும் செலிங்கோ லைப் பொது முகாமையாளர்களும் கலந்துகொண்டன.
|