ஓய்வு பெற்றுச் செல்லும் 65 ஆவது படைத் தளபதிக்கு துனுக்காய் பிரதேச வாசிகளது வாழ்த்துக்கள்
14th March 2018
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் பிரியாவிடை நிகழ்வு (12) ஆம் திகதி திங்கட் கிழமை படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.
இரண்டரை வருடங்கள் 65 ஆவது படைத் தலைமையகத்தில் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன ஓய்வு பெற்றுச் செல்லும் நிகழ்வு (12) அம் திகதி துனுக்காய் பிரதேசத்தில் அமைந்துள்ள தலைமையகத்தில் இப்பிரதேச மக்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.
ஓய்வு பெற்றுச் செல்லும் 65 ஆவது படைத் தளபதிக்கு படைத் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் 1 ஆவது கஜபா படையணியினால் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.
பின்பு படைத் தளபதி 65 ஆவது படைத் தலைமையக வளாகத்தினுள் அப்பிரதேச வாசிகளை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் அந்த பிரதேசவாசிகள் படைத் தளபதி இந்த பிரதேசத்தில்’ஆற்றிய சேவையை கௌரவித்து மனப்பூர்வமான வாழ்த்துக்களை படைத் தளபதிக்கு தெரிவித்தனர்.
இந்த நிகழ்விற்கு படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், பதவி நிலை பிரதானிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|