களுத்தரை மாவட்ட வருடாந்த சாரணர் ஜம்போரியத்தை முன்னிட்டு இராணுவத்தினரது ஒத்துழைப்பு
13th March 2018
இலங்கை சாரணர் சங்கத்தினால் 582 ஆவது படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய கடந்த தினங்களில் களுத்தரை, பயாகல பொதுவில மஹா வித்தியாலய வளாகத்தினுள் 5 நாட்கள் களுத்தரையில் இடம்பெற்ற சாரணர் ஜம்போரியத்திற்கு இராணுவ கொமாண்டோ படையணியின் பயிற்சி விப்பாளர்கள் ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
இந்த ஜம்போரியத்திற்கு களுத்தரை மாவட்டங்களில் உள்ள சாரணர் மற்றும் சிரார் சாரணர்கள் உள்ளடக்கப்பட்ட 1800 பேர் இந்த ஜிம்போரியாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு 58 ஆவது படைப் பிரிவின் வழிக்காட்டலின் கீழ் 582 ஆவது படைத் தலைமையகத்தில் படைத் தளபதி பிரிகேடியர் எஸ்.எம்.பி.பீ சமரகோன் மற்றும் அவர்களது படைத் தலைமையகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.
|