கெடெற் அதிகாரிகள் சிங்க படையணி தலைமையகத்திற்கு கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டனர்
10th March 2018
தியத்தலாவை இராணுவ எகடமியில் பயிற்சியை மேற்கொள்ளும் கெடெற் அதிகாரிகள் அவர்களது கல்வி சுற்றுலாவின் நிமித்தம் இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்திற்கு (9) ஆம் திகதி சுற்றுலாவை மேற்கொண்டனர்.
உட்புகுப்பு எண் (85, 86) இலக்கத்தையுடைய கெடெற் அதிகாரிகள் சிங்கப் படையணி தலைமையகத்திற்கு இந்த சுற்றுலாவை மேற்கொண்டனர்.
இங்கு வருகை தந்த கெடெற் அதிகாரிகளை சிங்கப் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் அஜித் பல்லாவல அவர்கள் வரவேற்றார்.
இந்த சுற்றுலாவிற்கு 61 கெடெற் அதிகாரிகள் மற்றும் இராணுவ பயிற்சி அதிகாரிகள் 18 பேரும் வருகை தந்தனர்.
சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தி பிரதி கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் டப்ள்யூ.எல்.ஏ.சி பெரேரா அவர்கள் சிங்கப் படையணியின் கடமைகள் பொறுப்புகள் தொடர்பான விளக்கத்தை இவர்களுக்கு விரிவு படுத்தினார்.
|