3 ஆவது மகளீர் படையணியினால் நடாத்தப்பட்ட மருத்துவ கிளினீக்
10th March 2018
மகளீர் தினத்தை முன்னிட்டு 3 ஆவது (தொண்டர்) மகளீர் படையணி, மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் இலங்கை மகளீர் அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘சுவநாரி’ வைத்திய கிளினிக் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் தெஹிகத்தகண்டி 3 ஆவது இராணுவ மகளீர் படையணி தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.
மகளீர் படை வீராங்கனைகள் மற்றும் சிவில் பிரிவில் வேலை புரியும் 50க்கு மேற்பட்ட பெண்கள் இந்த கிளினிக்கில் பங்கு பற்றி பயணைப் பெற்றார்கள். 3 ஆவது மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சமரி விஜேதிலக அவர்களது அழைப்பையேற்று தெஹிகத்தகண்டிய சுகாதார வைத்திய அதிகாரி உட்பட அவர்களது சுகாதார பணிமனை அலுவலகர்களின் ஒத்துழைப்புடன் இந்த மருத்துவ கிளினிக் இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் உதவி பணிப்பாளர் சீதா கருணாரத்ன , இலங்கை மகளீர் அமைச்சின் உதவி பணிப்பாளர் துளக்சி பெர்ணாந்து மற்றும் தெஹிஅத்தகண்டிய பிரதேச செயலாளர் எம். டப்ள்யூ கிரோமனி அவர்கள் கலந்து கொண்டனர்.
|