இராணுவத்தினருக்கு இடையிலான இயற்பியல் சுறுசுறுப்பு மற்றும் காம்பாட் ஆபரேஷன் சிஸ்ட போட்டிகள்

9th March 2018

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இராணுவத்தினருக்கு இடையிலான இயற்பியல் சுறுசுறுப்பு மற்றும் காம்பாட் ஆபரேஷன் சிஸ்ட போட்டிகள் (7) ஆம் திகதி புதன் கிழமை மைலடி துப்பாக்கிச் சூட்டுமைதானத்தில் இடம்பெற்றன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் இந்த விளையாட்டு முதல் தடவையாக அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த விளையாட்டின் மூலம் இராணுவ வீரனுக்கு தேவையான எதிர்கால பல பரிமாண போர்க்கள சூழல்களுக்கு திறனை மேம்படுத்த கூடிய ஆற்றலைக் வளர்த்து கொள்ள முடியும்.

இப் போட்டிகளில் இராணுவ படையணிகளிலுள்ள 42 அணிகள் தனித்தனியாகவும் , இரு அணிகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த தேர்வுகள் பெப்ரவாரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெற்றன.

இறுதியில் 5 ஆவது இலங்கை இராணுவ சேவைப் பிரிவு முதலாவது இடத்தையும், 11 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 7 ஆவது (தொண்டர்) கஜபா படையணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

5 ஆவது இராணுவ பொது சேவை படையணியின் கோப்ரல் பி.பி.டீ ஹப்புஆரச்சி முதலாவது இடத்தையும், 4 ஆவது பொறிமுறை காலாட் படையின் கோப்ரல் டீ.எம்.ஜே அஜித் குமார இரண்டாவது இடத்தையும், 2 ஆவது தொண்டர் இலேசாயுத காலாட் படையணியின் சாதாரண போர் வீரன் டப்ள்யூ.டீ லக்மாள் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்வின் பரிசளிப்பு நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி , படைப் பிரிவின் படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள் , கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.

|