யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கால் பந்து போட்டிகள்
9th March 2018
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கால் பந்து போட்டிகள் 5 ஆவது இலங்கை இராணுவ போர்கருவிச் சிறப்பணி மைதானத்தில் (8) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் இராணுவத்தினரது விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த விளையாட்டு போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
இந்த விளையாட்டு ஒழுங்குகள் 52 மற்றும் 522 ஆவது படைத் தலைமையகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் 10 ஆவது விஜயாபாகு காலாட்படை மற்றும் 16(தொண்டர்) விஜயபாகு காலாட்படையணிக்கு இடையில் இடம்பெற்றன. இப் போட்டியில் 16 ஆவது விஜயபாகு காலாட் படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் வருகை தந்து வெற்றீயீட்டிய படை வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசினை வழங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் படைப் பிரிவின் படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
|