சிங்கப் படையணி மல்யுத்த போட்டியில் சம்பியனாக தேர்வு
9th March 2018
இராணுவ மல்யுத்த சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இராணுவ படையணிகளுக்கு இடையிலான மல்யுத்த போட்டிகள் பெப்ரவாரி மாதம் (28) ஆம் திகதி பனாகொட உள்ளரங்க விளையாட்டரங்கில் இடம்பெற்றன.
இலங்கை இராணுவ மல்யுத்த சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மூன்று நாள் போட்டிகள் பெப்ரவாரி (26-28 ) ஆம் திகதிகளில் நடைபெற்றன. இந்த போட்’டிகளில் தேசிய நடு நிலை நடுவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் வருகை தந்து வெற்றீயீட்டிய விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
.இலங்கை சிங்கப்ப படையணி 5 தங்க பதக்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொண்டது. இலங்கை மின்சாரம் மற்றும் பொறியியலாளர் படையணி 7 சில்வர் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டது.
மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிரி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
|