பொது மக்களுக்கு சிறுநீரகம் தொடர்பான மருத்துவ கிளினீக்

9th March 2018

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்க அவர்களது ஏற்பாட்டில் இந்த மருத்துவ கிளினீக் மற்றும் செயலமர்வு (6) ஆம் திகதி ‘ஜயந்தி வெவ’ பிரதேசத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு ஓய்வு பெற்ற மேஜர் அருண பெரேரா அவர்கள் முழுமையான அனுசரனைகளை வழங்கினார்.

இந்த மருத்துவ கிளினீக்கிற்கு 160 க்கு மேலான நோயாளிகள் வருகை தந்து சிகிச்சிகளை பெற்றுக் கொண்டனர். மேலும் 170 நோயாளர்களுக்கு வைத்திய பரிசோதனைகள்,வைத்திய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அத்துடன் வைத்திய பரிசோதனையின் போது கண்காணிப்பிற்கு உள்ளாகியிருந்த 6 நோயாளிகள் சிகிச்சைக்காக அநுராதபுர தளவைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர.

இந்த மருத்துவ கிளினீக்களுக்காக 60,000 ரூபாய் அனுசரனையாளரினால் நன் கொடையாக வழங்கப்பட்டன.

|