2018 ஆம் அண்டிற்கான இராணுவ நீச்சல் போட்டிகள் நிறைவு
8th March 2018
இராணுவ நீரியல் விளையாட்டுச் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான 2 மைல் தூர நீச்சல் போட்டிகள் கல்கிஸ்ஸ கடலில் (7) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.
இந்த போட்டிகளில் இலங்கை இராணுவத்திலுள்ள 13 படையணிகளைச் சேர்ந்த 157 படை வீரர்களும், 9 மகளீர் படை வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் கஜபா படையணி மற்றும் 1 ஆவது இராணுவ மகளீர் படையணி முதலாவது இடத்தை பெற்று வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
இராணுவ சேவை படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டப்ள்யூ. எம்.விமல் குமார மற்றும் 4 ஆவது மகளீர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஆர்.கே ஜயதிலக அவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அதிக புள்ளிகளை இந்த போட்டிகளில் பெற்றுள்ளனர்.
இந்த போட்டிகளில் இலங்கை இராணுவ சேவைப் படையணி (SLASC) , ஸ்ரீலங்கா மின்சார மற்றும் பொறிமுறை இயந்திர படையணி (SLEME) இரண்டாவது இடங்களையும் இலங்கை சிங்கப் படையணி மூன்றாவது இடங்களை பெற்றுள்ளது.
இந்த நிகழ்விற்கு இராணுவ நீரியல் சங்கத்தின் தலைவர் மற்றும் தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமசிங்க அவர்கள் வருகை தந்து வெற்றீயீட்டிய படை வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வைத்தார்.
இராணுவ நீரியல் சங்கத்தின் செயலாளர் கிளிபட் த சொயிஷா மற்றும் இராணுவ சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|