புதிய படைச் செயற்பாட்டு திட்டமிடல் கட்டளை அதிகாரியாக பதவியேற்பு

8th March 2018

மேஜர் ஜெனரல் கே.ஏ.டீ.எஸ்.எல் பெரேரா புதிய இராணுவ படைச் செயற்பாட்டு திட்டமிடல் கட்டளை தளபதியாக நேற்றைய தினம் (5) ஆம் திகதி கொஸ்கம தலைமையகத்தில் பதவியேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை தளபதிக்கு தலைமையகத்தில் இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து சமய ஆசீர்வாத நிகழ்வுகள் மற்றும் மதிய போசன விருந்தோம்பல் அனைத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.

மேஜர் ஜெனரல் கே.ஏ.டீ.எஸ்.எல் பெரேரா அவர்கள் இந்த பதவியேற்பிற்கு முன்பு தெற்கு முன்பாதுகாப்பு அரங்க கட்டளை தளபதியாக பதவி வகித்துள்ளார்.

|