64 ஆவது படைப் பிரிவினரால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டிகள்
8th March 2018
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக் கருவிற்கமைய 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது தலைமையில் இந்த கரப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன.
இந்த இறுதிச் சுற்றுப் போட்டிகள் 12 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 13 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிக்கு இடையில் இடம்பெற்றன.
இந்த போட்டியில் 13 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டு சம்பியன்சிப்பை பெற்றுக் கொண்டது.
இந்தப் போட்டியில் இராணுவத்திலுள்ள 12 படையணிகள் பங்கேற்றுக் கொண்டன.
இந்தப் போட்டியில் 13 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கோப்ரல் கே. என். எஸ் கவிசென, சாதார போர் வீரன் வி.எம் சதுரங்க , லான்ஸ் கோப்ரல் கே. குமாரசேன மற்றும் லான்ஸ் கோப்ரல் கே கருணாரத்ன அவர்கள் இந்த போட்டிகளில் கலந்து தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் துஷயந்த ராஜகுரு அவர்கள் வருகை தந்தார்.
|