பொறிமுறை காலாட் படையணியின் 11 ஆவது வருட நிகழ்வு

6th March 2018

தம்புள்ள பிரதேசத்தில் அமைந்திருக்கும் பொறிமுறை காலாட் படையணியின் தலைமையகத்தில் அவர்களது 11 ஆவது ஆண்டு பூர்த்தி விழா சமய சம்பிரதாய ஆசீர்வாதத்துடன் இடம்பெற்றன.

இந்த ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு சமய சம்பிரதாய நிகழ்வுகள் கதிர்காம்ம் கிரி வெஹெர விகாரை, கதிர்காம ஆலயம், தலதா மாளிகை மற்றும் மஹா போதியவில் இடம்பெற்றன.

மேலும் வஹாகொட்டே றோமன் கத்தோலிக்க தேவாலயத்திலும், கலேவெல இந்து கோயிலிலும் மற்றும் புவக்பிடிய முஸ்லீம் பள்ளிவாசலில் இந்த சமய ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றது.

தலைமையகத்தில் இடம்பெற்ற வருடாந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க வருகை தந்தார். அவரிற்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுத்து வரவேற்கப்பட்டார்.

அன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்ட மதிய போசன விருந்தோம்பலில் படைத் தளபதி அனைத்து படை வீரர்களுடன் இணைந்திருந்தார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் பொறிமுறை காலாட் படையணியின் கட்டளை தளபதி கேர்ணல் எச்.எம்.யூ ஹேரத் அவர்களது பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

|