மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சட்டம்' தொடர்பான செயலமர்வு

6th March 2018

கிளிநொச்சி பிரதேசத்தில் கடமை புரியும் இராணுவ அதிகாரிகளுக்கு அறிவை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் (02) ஆம் திகதி வெள்ளிக் கிழமை செயலமர்வு இடம்பெற்றன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க இந்த செயலமர்வை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகளான ரோகித பிரியதர்ஷன மற்றும் தனுஷ்க சமில அவர்களின் பங்களிப்புடன் கிளிநொச்சி ‘நெலும்பியச’ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமை புரியும் 15 இராணுவ அதிகாரிகளும், 550 இராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.

|