53 ஆவது இராணுவ வீதி ஓட்டப் போட்டிகள் 2018 ஆம் ஆண்டு ஹிக்கடுவையில் முடிவு

5th March 2018

2018 ஆம் ஆண்டிற்கான இராணுவ வீதி ஓட்டப் போட்டிகளில் இலங்கை இராணுவத்திலுள்ள 22 படையணிகளை பிரதிநிதித்துவ படுத்தி விளையாட்டு வீர வீராங்கனைகள் 140 பேர்களின் பங்களிப்புடன் (04) ஆம் திகதி காலை ஹிக்கடுவையில் ஆரம்பமாகி பத்தேகம பிரதேசத்தில் 21 கிலோமீட்டர் தூரத்தில் இந்த போட்டிகள் முடிவடைந்தது.

இலங்கை இராணுவத்தில் தடகள விளையாட்டு சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த போட்டிகள் காலை 6.00 மணிக்கு ஹிக்கடுவ மக்கள் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகி பத்தேகமையில் முடிவடைந்தது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை தடகள விளையாட்டு சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களின் மேற்பார்வையில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த போட்டிகள் இடம்பெற்றன.

தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டிகளுக்கு பங்கு கொள்வதற்காக இராணுவ வீதி ஓட்டப் போட்டியின் மூலம் இராணுவ வீர, வீராங்கனைளை ஊக்கிவிக்கும் முகமாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் 53 ஆவது இராணுவ வீதி ஓட்டப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

இந்த போட்டிகள் 58 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களின் அனுசரனையில் இடம்பெற்றன.

இந்த வீதி ஓட்டப் போட்டியில் வெற்றீயீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு சான்றிதழ் இராணுவ தலைமையகத்தின் விளையாட்டு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுதசிங்க மற்றும் போக்குவரத்து பணிப்பாளர் இலங்கை இராணுவ சேவை படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் ருவன் குணதிலக அவர்களும் இணைந்து கொண்டார்.

வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு

(ஆண்கள் பிரிவு)

● இலங்கை பீரங்கிப் படையணி

(பெண்கள் பிரிவு)

● 6 ஆவது இலங்கை இராணுவ மகளீர்

ஆண்கள் பிரிவு

● முதலாவது இடம் – துப்பாக்கியாளார் கே. சம்முகேஷ்வரன் – இலங்கை பீரங்கிப் படை

● இரண்டாவது இடம் – லான்ஸ் கோப்ரல் வயி.பீ.எம் குணதிலக – இலங்கை இராணுவ சேவை படையணி

● மூன்றாவது இடம் – பொம்படியர் பீ.யூ விஜித குமார – இலங்கை பீரங்கிப் படை

பெண்கள் பிரிவு

● முதலாவது இடம் – பயிலிளவ மகளீர் படையாளி ஏ.எல்.எஸ்.டீ லியனகே – 4 ஆவது இராணுவ மகளீர் படையணி

● இரண்டாவது இடம் – மகளீர் படையாளி பி. எம். எஸ் செவ்வந்தி – 6 ஆவது இராணுவ மகளீர் படையாளி

● மூன்றாவது இடம் - மகளீர் படையாளி ஏ. எஸ் .என் பண்டார – 6 ஆவது இராணுவ மகளீர் படையாளி

|