1ஆவது விஜயபாகு காலாட் படையினரால் பலாலி விமான நிலையம் யாழ் மாணவர்களுக்கு காண்பிப்பு

2nd March 2018

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 52ஆவது படைப் பிரிவின் 1ஆவது விஜயபாகு காலாட் படையினரால் யாழ் புதுர் பிரதேச மதிஹி பன்னசீகா வித்தியாலய மாணவர்களுக்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்விச் சுற்றுலாவின் போது பலாலி விமா நிலையத்தினைப் பார்வையிடுவதற்கான ஒழுங்குகளை கடந்த புதன் கிழமை (28) வழங்கினர்.

அந்த வகையில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் பலாலி விமானப் படைக் கட்டளை தளபதியவர்களின் அனுமதியை பெற்று 1ஆவது விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் தம்மிக்க ஜயரத்தின அவர்களின் ஒத்துழைப்போடு இந் நிகழ்வூ இடம் பெற்றது.

இதன் போது மாணவர்களுக்கு யN32 போன்ற விமான நிலையத்தை பார்வையிட்டதோடு இதற்கான முழு ஒத்துழைப்பையூம் பலாலி விமானப் படை அதிகாரிகள் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியவர்கள் மற்றும் பொது மக்கள் தமக்கான உதவிகளை வழங்கி வைத்த 1ஆவது விஜயபாகு காலாட் படையினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

|