படையினருக்கான நான்காவது தமிழ்ப் பாடநெறிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
2nd March 2018
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினருக்கான ஒரு மாத கால நான்காவது தமிழ்ப் பாடநெறிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது கடந்த புதன் கிழமை (28) வழங்கப்பட்டது.
இப் பாநெறியானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
நெலும் பியஸவில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட படைத் தளபதியவர்களால் 750 படையினருள் தெரிவூ செய்யப்பட்ட சிறந்த மாணவர்களான பத்து நபர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கடந்த 9மாதங்களாக இப் படைத் தலைமையகத்தில் 3103 படையினர் தமிழ் பாடநெறியைக் கற்றுள்ளனர். அந்த வகையில் இத் தமிழ் பேச்சு மொழியானது படையினர் தமது சேவைகளின் போது கடமையாறும் பிரதேசங்களில் எவ்வித மொழிச் சிரமமும் இன்றி சேவையாற்றுவதை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் எஸ் சத்தியசீலன் பிரதி பொலிஸ் மா அதிபர் திரு மகேஷ் வலிகன்ன முன்னரங்கு பாதுகாப்பு அதிகாரி உயர் அதிகாரிகள் கட்டளை அதிகாரிகள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அத்துடன் இந்து மற்றும் சமய அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
|