கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கால் பந்து விளையாட போட்டி முடிவு

2nd March 2018

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப்பிரிவின் 652ஆவது படைப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி கிண்ண சொக்கர் விளையாட்டு போட்டி கடந்த (27)ஆம் திகதி செவ்வாய் கிழமை பரவிபாஞ்சான் விளையாட்டு மைதானத்தில் நடைப் பெற்றது.

இந்த போட்டியை பார்வையிட கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் பிரதான விருந்தினராக கலந்து கொண்டார் . அதன் பின் இராணுவம் மற்றும் சிவில் அணிகளுக்கும் இடையில் போட்டிகள் இடம் பெற்றன.

இந்த சொக்கர் போட்டியில் 28 இராணுவ அணிகள் பங்கேற்றன. 1ஆவது கஜபா படையணி அணி மற்றும் 9ஆவது இலங்கை இராணுவ சமிக்ஞை அணிக்கும் இடையே போட்டிகள் நடைபெற்றன. 1ஆவது கஜபா படையணியின் 3-0 வெற்றி என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அதன்படி சிவில் விளையாட்டு குழுவினர்களும் பங்கேற்றன. இக் குழுவினரில் ஜெலி போய் விளையாட்டு குழுவினர் மற்றும் கலைமகள் விளையாட்டு குழுவினரகளுக்கும் இடையில் போட்டிகள் நடைப்பெற்றன.இறுதியில் 2-1 என்ற விகிதத்தில் ஜெலி போய் விளையாட்டு குழுவினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

போட்டி இறுதியில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியவர்களினால் பரிசுகளும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது.

|