யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்ற கபடிப் போட்டிகளில் 20ஆவது இலங்கை தேசியப் படையினர் வெற்றி

2nd March 2018

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கபடிப் போட்டிகளுக்கான இறுதிச் சுற்று பாலாலி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் கடந்த புதன் கிழமை (28) ஆம் திகதி இடம் பெற்றது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் ஆலோசனைக்கிணங்க இடம் பெற்ற இப் போட்டிகளிகள் அதிகாரிகள் மற்றும் படையினரின் திறனை விருத்தி செய்யூம் நோக்கில் இடம் பெற்றது.

அந்த வகையில் 4ஆவது விஜயபாகு காலாட் படையணியூடன் போட்டியிட்டு 20ஆவது இலங்கை தேசியப் படையினர் வெற்றி பெற்றனர்.

இவ்வாறு வெற்றி பெற்ற படையினருக்கான பரிசில்களை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் கலந்து கொண்டு வழங்கியதுடன் பல உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

|