14ஆவது சர்வதேச கயிறிழுத்தல் போட்டியில் இராணுவத்தினர் வெற்றி
2nd March 2018
சர்வதேச கயிறிழுத்தல் கழகம் மற்றும் கிளிநொச்சி படைத் தலைமையம் இணைந்து நடாத்திய 14ஆவது சர்வதேச கயிறிழுத்தல் போட்டியில் இராணுவப் படையினர் வெற்றி பெற்றதுடன் இந் நிகழ்வூகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை மத்திய கல்லுரி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இப் போட்டிகளில் முப் படையைச் சேர்ந்த (ஆண் பெண்) இருபாலாரும் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள (பெண்கள்) வவூணியா விளையாட்டு கழகம் (ஆண் பெண்) பூகொடை தம்பிள் விiயாட்டு கழக (ஆண்கள்) ஹொரண ப்ரீடம் விளையாட்டு கழகம் (ஆண்கள்) மற்றும் மட்டக்களப்பு விiயாட்டு கழக (ஆண்கள்) போன்றௌர் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான 640 கிலோ பாரம் துக்கும் போட்டியில் இலங்கை இராணுவத்தினர் வெற்றி பெற்றதுடன் இலங்கை கடற் படையினர் மற்றும் பொலிஸ் படையினர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.
பெண்களுக்கான பிரிவில் 540 கிலோ இலங்கை கடற் படையினர் வெற்றி பெற்றதுடன் இலங்கை இராணுவப் படையினர் மற்றும் இலங்கை விமானப் படையினர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.
இந் நிகழ்வில் 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 55ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜகத் ரத்நாயக்க கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
மேலும் கயிறிழுத்தல் சங்கத்தின் தலைவரான கேர்ணல் ஜானக ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.
|