20 ஆவது இராணுவ காலாட் படையினரால் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
2nd March 2018
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப்பிரிவின் 20 ஆவது இராணுவ காலாட் படைப் பிரிவின் ப டையினரின் ஒத்துழைப்புடன் கடந்த (25)ஆம் திகதி கிளிநொச்சி, பூணரின் பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கம்பன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது படையினரால் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்ளுக்கும் மதிய உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
இந்த உணவு வழங்கும் திட்டமானது 66ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்டிவலான அவர்களின் அறிவுறைக்கமைய படைப்பரிவின் அனைத்து படையினர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வின் திட்டம்மானது படையினர்களுக்கும் சிவில் மக்களுக்கும் இடையே நல்லுரவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
|