663ஆவது காலாட் படையணித் தலைமையகத்தில் ஆணைச் சீட்டு அதிகாரிகளுக்கான புதிய உணவூ விடுதி திறப்பு
2nd March 2018
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப் பிரிவின் 663ஆவது காலாட் படையணித் தலைமையகத்தில் ஆணைச் சீட்டு அதிகாரிகளுக்கான புதிய உணவூ விடுதியானது 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெல அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் 663ஆவது காலாட் படையணித் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுபாசன வெலிக்கல அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இவ் உணவூ விடுதியில் அதி கூடிய வசதிகளுடனான குடிநீர் வசதிகளுடனான சமையலரை தொலைக் காட்சிப் பெட்டிகள் போன்றன பொருத்தப்பட்டு காணப்பட்டன.
இந் நிகழ்வில் 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் பல உயர் அதிகாரிகள் படையினர் போன் கலந்து கொண்டனர்.
|