57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பதவியேற்பு

26th February 2018

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் 11 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.

படைப் பிரிவிற்கு வருகை தந்த படைத் தளபதியை 3 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த படையினர் இராணுவ மரியாதையுடன் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து மஹா சங்க பௌத்த தேரரின் சமய ஆசிர்வாத நிகழ்வுடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.

பின்பு படைத் தளபதியினால் படைத் தலைமையகத்தில் படையினர் மத்தியில் உரைநிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.

பின்பு தலைமையகத்தில் அனைத்து நபர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற தேநீர் விருந்துபசார நிகழ்விலும் படைத் தளபதி பங்கேற்றுக் கொண்டார்.

|