கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 4ஆவது தற்காப்பு கலைப் பயிற்சிகள் முடிவு
25th February 2018
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பன்னவெல அவர்களின் தலைமையில் தற்காப்புக் கலைப் பயிச்சிகளைப் பயின்ற 17 மகளிர் படையினர் உள்ளடங்களான 64 படையினர்களின் 4ஆம் கட்ட பயிச்சிகளின் நிறைவு 23ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த வியாழக் கிழமை (22) இடம் பெற்றது.
இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பன்னவெல அவர்களின் கண்காணிப்பின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் ஆண் பெண் இருபாலாரதும் பாதுகாப்பை பேனும் நோக்கில் இத் தற்காப்புக் கலைப் பயிற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தமிழ் மொழிப் பயிற்ச்சிகள் மற்றும் புலனாய்வூப் பயிற்ச்சிகள் போன்றன இடம் பெறுகின்றன.
இந் நிகழ்வில் 24ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரான டபிள்யூ+ ஜெ ஜாகொடஆராச்சி 24ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுல்ல அபேநாயக்க காலாட் படையணி மையத்தின் பிரிகேடியர் உதித் பண்டார 231 படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் செனரத் நிவுன்ஹெல்ல 232 படைப் பிரிவின் கட்டளை அதிகாரியனா கேர்ணல் ரொஷான் ஜயமான்ன 233 படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் அணில் சமரசிங்க 242 படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் உபுல் வீரகோண் கடற்படை கட்டளை அதிகாரியான காசியப்ப விமானப் படைத் தலைமைய கட்டளை அதிகாரியான உதய குமார விங்கமாண்ட விதானகே மற்றும் பல கட்டளை அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
இவ்வாறான தற்காப்புக் கலைப் பயிற்ச்சியாது தமது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளும் நோக்கிலும் இக்கட்டான சூழ்நிலைகளில் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் பற்றியதோர் வழிப்புணர்வைக் கொனரும் நோக்கில் இடம் பெற்றது.
அந்த வகையில் காலாச்சாரக் கலைகளாக கராத்தே போன்றன தற்பாதுகாபை மையமாகக் கொண்டு காணப்படுவதுடன் இவை ஓர் ஓய்வு நேர செயற்பாடோ அல்லது விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கி;ன்ற பயிற்ச்சிகளோ இல்லை மாறாக தம்மை பாதுகாத்துக் கொள்ள பயிலுகின்ற தற்பாதுகாப்பு கலையாகக் காணப்படுகின்றது.
|