காலியில் இடம் பெற்ற 233ஆவது படைப் பிரிவின் பயிற்சிகள் வெளியேற்ற விழா
25th February 2018
காலி பூசாவில் அமைந்துள்ள 233ஆவது படைப் பிரிவின் 98ஆவது பயிற்ச்சிகள் பிரிவில் கிட்டத் தட்ட ஆறு மாதகால இராணுவப் பயிற்ச்சிகளை நிறைவு செய்த படையினரின் வெளியேற்ற நிகழ்வுகள் கடந்த வெள்ளிக் கிழமை (24) இடம் பெற்றது.
அந்த வகையில் இராணுவ அணிவகுப்பு முறைகளுக்கமைவாக கலாச்சார பயிற்சி உடல் பயிற்சிக் காட்சிகள் மூலம் வண்ணமயமான பேண்வாத்திய இசைக்குழு மற்றும் தைக்கொண்டோ பயிற்சிகள் போன்றன இப் படையினரால் பார்வையாளர்களுக்கு நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை இலேசாயூத காலாட் படையணிப் பயிற்றுவிப்பு மையத்தின் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் மல்கம் குணசேகர அவர்களது அழைப்பை ஏற்று 58ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்.
இப் பயிற்ச்சிகளில் சிறந்த பயிலுனராக எஸ் ஆர் பி கே சிங்கரகே தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த உடற் பயிற்ச்சி பயிலுனராக எச் ஆர் கே ஜயவர்தன தெரிவூ செய்யப்பட்டார். அத்துடன் சிறந்த துப்பாக்கிச் சூட்டாளராக பயிலுனர்.
இவ்வாறு சிறந்த பயிலுனரான எஸ் ஆர் பி கே சிங்கரகே பிரதம அதிதியவர்களால் பரிசில்களைப் பெற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் பெற்றௌர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
|