வீதியில் தடை பிறண்ட லொறியை மீட்கும் பணிகளில் 661ஆவது படையினர் ஈடுபாடு

24th February 2018

மன்னாரில் இருந்து யாழ் A32 வீதியினுhடாக பயணித்த தனியார் லொரியானது நாலாங்கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள 661ஆவது காலாட் படைப் பிரிவின் முன் கடந்த திங்கட் கிழமை (19) தடம் பிறண்டது.

அந்த வகையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66ஆவது படைப் பிரிவின் 661ஆவது படைப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணிகளைக் காப்பாற்றியுள்ளனர்.

அதன் பின்னர் பாதையில் விலகிக் காணப்பட்ட லொறியை மீட்டு அதனுள் காணப்பட்;ட பொருட்களை மீட்டு வேறு வாகனத்தில் ஏற்றுவதற்கு உதவியுள்ளனர்.

இறுதியாக இவ் வாகனத்தின் உரிமையாளரும் சாரதியுமான திரு எஸ் சந்தானம் அவர்கள் 661ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் பிரியந்த ஜயவர்தன அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

|