70 ற்கும் மேற்பட்ட படையினரால் பாடசாலை வளாகம் சுத்திகரிப்பு
22nd February 2018
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைத் தலைமையகத்தின் 10ஆவது இலேசாயூத காலாட் படையினரால் துனுக்காய் பள்ளிநகர் பாடசாலை வளாகம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்றன கடந்த சனிக் கிழமை (17) சுத்திகரிக்கப்பட்டது.
அந்த வகையில் 10ஆவது இலேசாயூத காலாட் படையின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சுபாஷ் கருணாரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2 அதிகாரிகள் உள்ளடங்களாக 72 படையினர் இச் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் இப் பணிகள் கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிகாட்டலில் 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் ஒத்துழைப்புடன் இடம் பெற்றது.
இவ்வாறு சிரமதானப் பணிகளை மேற்கொண்ட படையிரை பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றௌர்கள் பாராட்சி தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
|