யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கடமைகள் தொடர்பாக அவுஸ்திரேலியா பிரதிநிதிகளுக்கு தெரிவிப்பு
22nd February 2018
யாழ் குடாநாட்டிற்கு (19) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்ட அவுஸ்திரேலியா பிரதிநிதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் இராணுவத்தினரது கடமைகள் தொடர்பாக அறிந்து கொள்ளும் கலந்துரையாடல் இடம்பெற்றன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை பிரதிநிதித்துவ படுத்தி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் அநுருத்த செனெவிரத்ன இந்த பிரதிநிதிகளை யாழ் தலைமையகத்தில் வரவேற்றனர்.
பின்பு இந்த பிரதிநிதிகளுடன் யாழ் குடா நாட்டில் சமாதான நல்லிணக்க மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் மீள்சீரமைப்பு, துரித அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் தொடர்பான விடயங்கள் இராணுவ அதிகாரிகளால் இந்த பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது இலங்கைக்காள அவுஸ்திரேலியா தூதரகத்தின் பிரதிநிதிகளான டிம் குகின்ஷ் (Mr Tim Huggins), பாதுகாப்பு ஆலோசகர் குறுப் கெப்டன் சீன் உன்வின் (Group Captain Sean Unwin), ஸ்கொட்மெதிசன் (Mr. Scott Matheson), அவுஸ்திரேலியா பெடரல் பொலிஸ் பெடரல் பிரதிநிதி ஜேகப் பர்சேல் (Mr. Jacob Purcell ) மற்றும் அவுஸ்திரேலியா அரசின் பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்தின் முகாமையாளர் ரவி ஜயவிக்ரம அவர்கள் கலந்து கொண்டனர்.
|