11 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட அடிப்படை புலனாய்வு பயிற்சி நெறி நிறைவு
20th February 2018
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட அடிப்படை புலனாய்வு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (14) ஆம் திகதி புதன் கிழமை கண்டியில் அமைந்துள்ள படைப் பிரிவு கேட்போர்கூடத்தில் இடம்பெற்றன.
இந்த பயிற்சி நெறியில் 11 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் படையணிகளைச் சேர்ந்த 6 அதிகாரிகளும், 80 படை வீரர்களும் இணைந்திருந்தனர்.
பயிற்சி நெறிகள் 2017 ஆம் ஆண்டு 02 ஆம் திகதி ஒக்டோபர் ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரை இடம்பெற்றன. இப் பயிற்சி நெறிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய இடம்பெற்றன.
இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவக கலந்து கொண்டு பயிற்சி நிறைவுற்ற இராணுவத்தினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
|