பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் கிளிநொச்சியில் இராணுவ நீதிரீதி தொடர்பாக கற்றுக்கொண்டார்
20th February 2018
பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகரான சையது மக்சுமுல் ஹக்கீம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனையை (17) ஆம் திகதி சனிக் கிழமை படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இவ்விருவரது சந்திப்பின்போது கிளிநொச்சி தளபதியின் பணிமனையில் கிளிநொச்சியை தளமாகக் கொண்ட CIMIC செயற்பாடுகளில் சுருக்கமான விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இறுதியில் இவ்விருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.
பின்னர், பாதுகாப்பு ஆலோசகர் 66 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தை பார்வையிட்டார். அங்கு லெப்டின கேணல் எரந்த ரத்னாயக்கவினால் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் செயற்பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை பாதுகாப்பு ஆலோசகருக்கு விளக்கினார். அதனை தொடர்ந்து 66 ஆவது படைப் பிரிவில் இடம்பெற்ற கலாச்சார நிகழ்விலும் இவர் இணைந்தார்.
|