ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் எனும் தொணிப்பொருளில் இராணுவ வைத்தியசாலையில் கருத்தரங்கு

18th February 2018

இராணுவத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் எனும் திட்டமானது பிரிகேடியர் (வைத்தியர்) ஏ எஸ் எம் விஜேவர்தன அவர்களின் தலைமையில் நாரஹென்பிட்ட இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (16) இடம் பெற்றது.

அந்த வகையில் இத் திட்டத்தின் கீழ் ஆரோக்கியமான உணவை எவ்வாறு தயார் செய்தல் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கான விரிவுரைகள் போன்றன பற்றிய அறிபூர்வமான கருத்தரங்கு வெள்ளிக் கிழமை (16) இடம் பெற்றது.

இதன் போது ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் எனும் திட்டத்தின் தலைவரான பிரிகேடியர் (வைத்தியர்) ஏ எஸ் எம் விஜேவர்தன உளநல ஆலோசகரான கேர்ணல் ஆர் எம் எம் மொனராகலை லெப்டினன்ட் ஏ சி கே உடுகம வின்ஸ்டன் ஹேட்டல் கல்லுாரியின் மேலதிக விரிவுரையாளரான திரு லெனாட் பெரேரா மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசகர் செல்வி குமுதினி சத்ரசிங்க போன்றோர் கலந்து கொண்டு இது தொடர்பான விளக்கத்தை வழங்கி வைத்தனர்.

இதன் போது இத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றிய விளக்கத்தை ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் எனும் திட்டத்தின் தலைவரான பிரிகேடியர் (வைத்தியர்) ஏ எஸ் எம் விஜேவர்தன அவர்கள் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் அனைத்து இராணுவப் படைத் தலைமையகங்களையூம் உள்ளடங்கிய 125 அதிகாரிகள் அனுராதபுர 3(தொண்டர்) சேவைப் படையணிப் பயிற்றுவிப்பு பாடசாலையின் உயர் அதிகார்கள் மற்றும் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இவ் ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம் எனும் திட்டமானது உயிர் ஆபத்தை ஏற்படுத்துகின்ற நீரிழிவு மற்றும் பல நோயினால் இராணுவத்தி பாதிக்கப்பட்டுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் இத் திட்டத்தில் இராணுவ மருத்துவப் பணிப்பகத்தினால் தமது 22வருட சேவையைப் பூர்த்தி செய்து 40 வயதில் வெளியேறும் படையினரில் பெரும்பாலான எண்ணிக்கையிலாநோர் சிறுநீரக பாதிப்பு மற்றும் மாரடைப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவ் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

|