இராணுவ ஆண் நீச்சல் வீரர்கள் சம்பியன்களாக தேர்வு

18th February 2018

அம்பலாங்கொட தர்மாசோக கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட 45 ஆவது திறந்த இரண்டு மைல் கடல் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் (18) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.

இந்த போட்டிகள் அம்பலாங்கொட கடற்கரையில் இடம்பெற்றது. இப்போட்டியில் 300 நீச்சல் வீரர்களை பிரதிநிதித்துவ படுத்தி 30 விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்தப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் ஆண் அணி பங்கு பற்றி சம்பியன்ஷிப்பை சுவீகரித்துக் கொண்டது.

|