யாழ் படையினரருக்கு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நீதிகள் தொடர்பான அறிவூட்டல்

18th February 2018

யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நீதிகள் தொடர்பான அறிவூட்டல் இரு நாள் கருத்தரங்கானது இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருக்கு பெப்ரவரி 15-16ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திரு ரோஹித்த பிரியதர்ஷன மற்றும் திரு தனுஷ்க சமில் போன்றோரால் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இவ்விருநாள் கருத்தரங்கில் 500ற்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்.

இக் கருத்தரங்கானது இராணுவத்தினருக்கு மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

|