621 ஆவது படைப் பிரிவினரால் பாடசாலை மாணவர்களுக்கான கணினிகள் வழங்கி வைப்பு
18th February 2018
621 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கல்ப சன்ஜீவ மற்றும் இப் படைப் பிரிவின் சிவில் தொடர்பாடல் அதிகாரியான மேஜர் எச் ஏ டீ ஜி டி அல்விஸ் போன்றௌரின் தலைமையில் ஆறு கணினிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றன முல்லைத் தீவு மாவட்ட வெலி ஓயா கல்யாணிபுர மகா வித்தியாலய மாணவர்களுக்கு கொழும்பு ஹில்டன்ட் ஹோட்டல் கிளையின் ஒரு பகுதிக் குழுவினரின் அனுசரனையில் இப் பாடசாலை வளாகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (16) வழங்கப்பட்டது.
அந்த வகையில் 621ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியவர்களின் ஆலோசனைக்கிணங்க புதிய ஆறு கணினிகள் மேசைகள் போன்றன கல்யாணபுர மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 621ஆவது படைப் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டது.
மேலும் 62ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சன்ஜய வனிகசிங்க கொழும்பு ஹில்டன்ட் ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரியான திரு ராஜேந்திர வட்டுவிட்ட இக் ஹோட்டலின் பிரதி கணக்கியலாளரான திரு ஹேமகந்த டி சில்வா மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை அதிபரிடம் கணினிகள் போன்றன வழங்கப்பட்டதுடன் சம்பத்துவ வலயக் கல்விப் பணி;ப்பாளரான திரு ஆர் எம் ரத்நாயக்க பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
இத் திட்டத்திற்கான ஒத்துழைப்பை வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் வழங்கினார்.
|