நிச்சல் போட்டிகளில் சாதனைகளை நிலைநாட்டிய வீரர் வீராங்கனைகள்

16th February 2018

இலங்கை இராணுவப் படையணிகளில் 11 படையணியும், மூன்று மகளிர் படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 80 க்கும் அதிகமான நீச்சல் வீரர் வீராங்கனைகள் இந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்டன. இந்த குறுகிய துார நீச்சல் போட்டியானது பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை அனுராதபுரத்தில் உள்ள 21ஆவது படைப்பிரிவின் நீச்சல் தடாகத்தில் இடம் பெற்றது.

இறுதி போட்டியில் இலங்கை இராணுவ கவசப் படையணி வெற்றிப் பெற்று பதக்கங்களை வென்றது. இப் போட்டியில் இலங்கை பொறியியலாளர் படையணி இரண்டாம் இடத்தை பெற்றது. அதே போல் இராணுவ 2ஆவது மகளிர் (தொண்டர்) படையணி வெற்றிப் பெற்று பதக்கங்களை வென்றதுடன் 3ஆவது மகளிர் படையணி இரண்டாம் இடத்தை பெற்றது. இப் போட்டி கடந்த வியாழக் கிழமை 15ஆம் திகதி இடம் பெற்றது.

இராணுவ நீர் விளையாட்டு கழகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட நீச்சல் போட்டிக்கு பிராதான விருந்தினராக 54ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அதுல கமஹே அவர்கள், இராணுவ தொண்டர் படையணியின் கட்டளை தளபதி, சிங்க படையணியின் கட்டளை தளபதி கலந்துகொண்டார்கள்.

பிராதான விருந்தினராக வருகை தந்த 54ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அதுல கமஹே அவர்களினால் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டன.

|