கஜபா விரு சவியா ' புலமைப்பரிசு விருதுகள் பாடசாலை மாணவர்களுக்கு

16th February 2018

கஜபா விரு சவிய, இராணுவ கஜபா படையினரது பிள்ளைகளுக்கு புலமைப்பரிசு வழங்கும் நிகழ்வு சாலியபுர கஜபா படைத் தலைமையகத்தில் (13) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் கஜபா படையணியின் சேவாவனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் அவர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கஜபா படையணியின் தரம் 5 மற்றும் பொது சாதாரணதர பரீட்சையில் சித்திபெற்ற 50 பாடசாலை பிள்ளைகளுக்கு புலமைப்பரிசுகள் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

தரம் 5 பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு புலமைப் பரிசில் மாதாந்தம் ரூபாய் 1500 /= படி ஒரு வருடத்திற்கும், பொது சாதாரணதர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு புலமைப் பரிசில் மாதாந்தம் ரூபாய் 1500 /= படி இரு வருடத்திற்கும், பொது உயர்தர பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமைப் பரிசில் மாதாந்தம் ரூபாய் 5000 /= படி மூன்று வருடத்திற்கு இந்த கொடுப்பணவுகள் வழங்கப்பட்டன.

கஜபா படையணி தலைமையகத்தினால்ஒவ்வொரு ஆண்டும் கஜபா படைவீரர்களின் குடும்பத்தாரின பிள்ளைகளது கல்வித் தரங்களை உயர்த்தும் எண்ணத்துடன் புலமைப்பரிசுகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கஜபா சேவா வனிதாபிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

|