622 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பதவியேற்பு

15th February 2018

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 622 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை அதிகாரியாக கேர்ணல் எஸ்.பீ அமுனுகம (12) ஆம் திகதி திங்கட் கிழமை தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

மணலாறு ஹெலம்பஹவெவயில் அமைந்துள்ள 622 ஆவது படைத் தலைமையகத்தில் புதிய கட்டளை அதிகாரிக்கு இராணுவ மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டளை அதிகாரியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு படையணியின் கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

|